கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூர் பகுதியில் 18 வயதுடைய கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவிக்கும் ஈச்சனாரி பகுதியில் வசிக்கும் தனியார் கூரியர் நிறுவன ஊழியரான அஜய் என்பருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அஜய் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதனையடுத்து மாணவியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதால் காதலர்கள் ஸ்கேன் செய்து பார்க்க விரும்பினர். நேற்று முன்தினம் கோவையில் இருக்கும் கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டது போல இருவரும் செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டனர். பின்னர் புகைப்படத்தை ஸ்கேன் மையத்தில் காண்பித்து தாங்கள் திருமணமானவர்கள் என்று கூறி ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மாணவி தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு அஜய் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து பேரூர் அனைத்து மகளிர் போலீசார் மாணவியை தொடர்பு கொண்டு பேசிய போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.