
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி அண்ணா நகரில் சொரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் வசந்தகுமார் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போனில் கேம் விளையாடிய வசந்தகுமாரை சொரிமுத்து கண்டித்தார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த வசந்தகுமார் தனது வீட்டிற்கு அருகில் இருந்த அரளிச்செடி காய்களை பறித்து அரைத்து குடித்து விட்டான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வசந்தகுமாரை மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.