கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லீபுரத்தில் சிவசுபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊர்க்காவல் படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த சசிகலா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சசிகலாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.