கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசூரில் இருக்கும் தனியார் பவுண்டரி தொழிற்சாலையில் பீகாரை சேர்ந்த ராஜேந்திர மஞ்சு(34) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மகன் உமேஷ் குமார் பீகாரில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி விடுமுறையை முன்னிட்டு உமேஷ் தனது தந்தையை பார்ப்பதற்காக அரசூருக்கு வந்துள்ளார். நேற்று காலை ராஜேந்திர மஞ்சு வேலைக்கு சென்ற பிறகு உமேஷ் குமார் வீட்டில் தனியாக இருக்க முடியாமல் தனது தந்தையை பார்ப்பதற்காக தொழிற்சாலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் ராஜேந்திர மஞ்சு வேலை வேலை செய்து கொண்டிருக்கும் மண் சலிக்கும் இயந்திரம் அருகே உள்ள மின்சாதன பெட்டியில் உமேஷ் குமார் கை வைத்ததாக தெரிகிறது. இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சிறுவன் படுகாயமடைந்தான். அவனை அக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு உமேஷ் குமாரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.