கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கோடி மாத்தார் பகுதியில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுருதி(19) நாகர்கோவில் சுங்கான் கடையில் இருக்கும் தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று காலை 9.45 மணிக்கு வகுப்பறையில் இருந்த சுருதி திடீரென மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்களும், சக மாணவிகளும் சுருதியை மீட்டு அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுருதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.