சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணனூர் தேவி நகர் சுபாஷ் தெருவில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு லதா(50) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷெலின் கில்டா(23) என்ற மகள் இருக்கிறார். நேற்று முன்தினம் மோகன் தனது மனைவி மற்றும் மகளுடன் சென்னை சூளைமேடு பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு லதா தனது மகளுடன் மொபட்டிலும், மோகன் தனியாக மோட்டார் சைக்கிளிலும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் சி.டி.எச் சாலை வளைவில் திரும்ப முயன்ற போது முன்னால் சென்ற காருக்கும் ஷெலின் ஓட்டி என்ற மொபட்டுக்கும் இடையே செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி மோதியது. இதனால் தாய், மகள் இருவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது லாரி சக்கரத்தில் சிக்கி லதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் லாரி டிரைவரான ஏழுமலை என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.