திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருந்து மினி பஸ் பாலசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பிரவீன்(27) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பாலசுப்பிரமணியன்(31) என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் அடிவாரம் மயிலாடும் பாறை பகுதியில் சென்ற போது பேருந்தில் இருந்த 3 வாலிபர்கள் பாலசுப்பிரமணியனுடன் தகராறு செய்தனர். இதனை பிரவீன் தட்டி கேட்டார். அப்போது அந்த வாலிபர்கள் பிரவீனையும், பாலசுப்பிரமணியனையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நேற்று பாலசமுத்திரம் செல்லும் மினி பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மினி பஸ்களை இயக்காமல் இருந்தனர். இதனை அறிந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.