சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அதே பகுதியில் வசிக்கும் சரத்குமார் என்பவர் விஜய் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த விஜய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விஜய்யின் தாய் கலா என்பவர் கஞ்சா வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு சரத்குமார் தான் காரணம் என நினைத்த விஜய் இதுகுறித்து தட்டி கேட்டார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சரத்குமார் சிறிய கத்தியால் விஜயை குத்தியது தெரியவந்தது. இதனால் சரத்குமாரை போலீசார் கைது செய்தனர்.