
சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் முடிச்சூர் சாலை சக்தி நகரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சென்னை துறைமுகத்தில் அலுவலக பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினர் தீபாவளி சீட்டு நடத்தியதால் பலரிடம் வாங்கிய 8 லட்ச ரூபாய் வரை நிலவையில் இருந்துள்ளது. இதனால் பணம் கொடுத்தவர்கள் தொந்தரவு செய்தனர்.
இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த பிரேமா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பிரேமாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பிரேமாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.