விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்வைலாமூரில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏழுமலையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் தன்னை நிதி நிறுவன ஊழியர் என அறிமுகப்படுத்திக்கொண்டார். இதனையடுத்து நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி தருவதாக கூறி அந்த நபர் நூதன முறையில் ஏழுமலையிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்தார். இதுகுறித்து ஏழுமலை விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் பண மோசடி செய்த நபர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டாலின் என்பது தெரியவந்தது. பி.இ மெக்கானிக்கல் படித்து முடித்துள்ள ஸ்டாலின் இதுவரை 3 பேரிடம் 1 1/2 லட்ச ரூபாய் வரை பணத்தை வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. வேலை கிடைக்காததால் போலி நிதி நிறுவனம் நடத்தி பல்வேறு இடங்களில் ஸ்டாலின் நூதன முறையில் மோசடி செய்துள்ளார். அவரை போலீசார் அதிரடியாக கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.