தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதனால் பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரத்தைச் சேர்ந்த போலீஸ் ஏட்டு காமராஜ் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென காமராஜ் மயங்கி விழுந்தார்.

அவரை ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சிகிச்சை பெற்று வரும் போலீஸ் ஏட்டு காமராஜை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து ஆறுதல் கூறினார்.