நம் நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் அடிப்படையில் மலிவான விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் தவிர்த்து அரசின் அனைத்து சலுகைகள் மற்றும் உதவித்தொகைகளும் வழங்கப்படுகிறது. இதனிடையில் மக்களின் வசதிக்காக ரேஷன் கடைகளில் பல்வேறு புது மாறுதல்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 55 லட்சம் ரேஷன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் 9.21 லட்சம் போலி ரேஷன் அட்டைகளும், பீகாரில் 4.25 லட்சம் போலி ரேஷன் அட்டைகளும் பயன்பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.