பிஎம் காப்பீட்டில் சேர்ப்பதாக கூறி மக்களை சிலர் BJPல் இணைத்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த BJP பிரமுகர் நாகமாணிக்கம், காப்பீடு அட்டை இல்லாதவர்களுக்கு பிஎம் காப்பீட்டுக்கு விண்ணப்பித்துக் கொடுத்து வந்துள்ளார்.

அந்த வகையில் விண்ணப்பிப்பவர்கள் எண்ணுக்கு BJPல் இணைந்ததாக எஸ்எம்எஸ் வந்துள்ளது.  அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.