இலங்கையில் தமிழீழ போர் நடந்த போது அப்போது அதிபராக இருந்த மகேந்தா ராஜபக்சே விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். விடுதலை புலிகள் அழிக்கப்பட்டன என அறிக்கை வெளியிட்டார். இதை தொடர்ந்து அடிக்கடி பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும்,  அவர் மீண்டும் வருவார் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்தியால் பரவுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று பழ. நெடுமாறன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார். அவர் மீண்டும் வருவதற்கான காலமானது கைகூடி இருக்கிறது. அவருடைய ஒப்புதலோடு இந்த தகவலை நான் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து பேசி உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பார் என்று நம்பவில்லை. பழ. நெடுமாறனின் பேச்சு தேவையற்றது. பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் என் தம்பி பாலச்சந்திரனை சாக கொடுத்துவிட்டு அவர் மட்டும் தப்பி போயிருப்பார் என்று நினைக்கிறீர்களா? எந்த சூழ்நிலையிலும் நாட்டை விட்டு போக மாட்டேன் என்று சொன்னவர். வீரமாக சண்டையிட்டவர். தன் உயிரை மட்டும் தற்காத்து கொண்டு தப்பி ஓடும் கோழை இல்லை எங்கள் அண்ணன் என சீமான் கூறியுள்ளார்.