செய்தியாளர்களிடம் பேசிய வைகோ மகன் துரை வைகோ, பொதுவா சொல்லுறேன் வலதுசாரி அரசியலை எதிர்கின்றவர்களில் நானும் ஒருவர். வலதுசாரி அரசியல்ன்னு சொல்லுறது,,,  மதம் மாத்திரம் கிடையாது, ஜாதி. மதத்தையும்,  ஜாதியையும் வைத்து அரசியல் பண்ணக்கூடாது. 

அரசியல் இயக்கங்கள்…. அரசியல் தலைவர்கள்…  நாட்டுக்கு தேவையான அத்தியாவசியமான  உணவு, கல்வி ,வேலை வாய்ப்பு, சாலை வசதி, மருத்துவம் இது போன்ற விவாதங்கள் நடக்கலாம். அதை விட்டு விட்டு தங்களுடைய குறைபாடுகளை மறக்க  ஜாதியை பத்தி பேசுறது, மதத்தை பத்தி பேசுறது, இது தான் சூடு. இதை பத்தி பேசுனா ஜனங்கள்  உடனே பிடிச்சிக்கிறாங்க. 

மக்கள் கிட்டயே சொல்லுறேன் நானு…. மக்கள் கிட்ட சொல்லுறேன்… தயவு செஞ்சு  ஜாதி –  மதத்தை பத்தி விவாதங்கள் வரும் பொழுது….  அதை ஒட்டுமொத்தமா புறக்கணிங்க. அரசியல்வாதிகளிடம்…. அரசியல் இயக்கங்களிடம்…  நீங்க என்ன செஞ்சீங்க? நீங்க என்ன அறிவிச்சிங்க ? என்ன செஞ்சிருக்கீங்க ? அது போன்ற விவாதங்கள் நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.