ஒரே நாடு,  ஒரே தேர்தலை அறிவிக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜயின் அடுத்த நகர்வு இதுதானா ? முக்கியத்துவம் என்ன என்பது குறித்தெல்லாம் அடுத்தடுத்து கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா ? கட்சியை தொடங்குவாரா என்ற கேள்வி தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் அவர் கட்சியை பதிவு செய்ய போகின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசியல் களத்தில் அவருக்கான சாத்தியங்கள்,  வாய்ப்புகள் என்ன என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய  அரசியல் விமர்சகர்கள், நடிகர் விஜய் பொருத்தவரை கூட்டணி வைக்க அவர் விரும்பவில்லை.

கூட்டணி வைத்தால் தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஒன்று அதிமுகவுடன் செல்ல வேண்டும் அல்லது திமுகவுடன் செல்ல வேண்டும். மூன்றாவதாக நாம் தமிழர் கூட்டணியில் இணைய வேண்டும். இந்த மூன்று கூட்டணியையும் அவர் விரும்புவதாக தெரியவில்லை. அதே நேரத்தில் அவருடைய ஆதரவாளர்கள் தங்கள்  பகுதியில் மக்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள… என்னென்ன செய்ய வேண்டும் என்ற பல்வேறு பயிற்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார். அவரது நிர்வாகிகள் அதற்கான முன்னேறுப்புகளை செய்து வருகின்றார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க…  விஜய் தரப்பில் சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த சர்வேயில் எந்தெந்த தொகுதிகள் எல்லாம் தங்களுக்கு வலுவாக இருக்கின்றன ? என அந்த தொகுதிகளை பற்றிய முழுமையான சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அந்த சர்வேயில் அவர்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய தொகுதிகள் என்னவென்றால் 160 தொகுதிகளில் 25 ஆயிரம் வாக்குகள் கண்டிப்பாக கிடைக்கும் என்ற ஒரு கணக்கு வந்திருக்கிறார்கள். அப்படி 25 ஆயிரம் வாக்குகளுக்கு  அதிகமாக இருக்கக்கூடிய தொகுதிகளில் எல்லாம் கண்டிப்பாக நாம் போட்டியிட வேண்டும் என்று சொல்கிறார்கள். 234 தொகுதிகளிலும் அவர்கள்  போட்டியிடுவார்களா ? அல்லது 160 தொகுதிகளில்  போட்டியிடுவார்களா? என்பதெல்லாம்  தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே முழுமையாக தெரியவரும்.