பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தனியார் விமானம் ஒன்று பயணித்தபோது, அதில் பயணித்த கேரளாவைச் சேர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த அசம்பாவிதம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணின் இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் அநாகரிகமாக நடந்துகொண்டு சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண், விமானம் திருவனந்தபுரத்தில் தரையிறங்கியவுடன், உடனடியாக விமான நிறுவன அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
புகாரைத் தொடர்ந்து, விமான நிறுவன அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். வட்டப்பாராவைச் சேர்ந்த ஜோஸ் என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவரது தவறு உறுதியானதால், ஜோஸை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் ஜோசை கைது செய்து, விசாரணைக்குப் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்தச் சம்பவம் விமானப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
