குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் வருடம் நடைபெற்ற கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற 21 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவரது 3 வயது பெண்குழந்தை உள்பட 14 பேர் அக்கலவரத்தில் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதை எதிர்த்து NFIW தாக்கல் செய்த மனுவை விசாரிக்க புதிய பெஞ்ச் அமைக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருக்கிறது. கடந்த 2002 ஆம் வருடம் குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 11 குற்றவாளிகளை நன்னடத்தையை காரணம் காட்டி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அரசு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.