செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேட்டீர்கள் ? உளவுத்துறை நன்றாக செயல்படுவதால் தான்,  தமிழகத்தில் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படுகின்றன. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படுகின்றன. நீயும் நானும் ஜனநாயகத்திற்கு உட்பட்டு எதிர் எதிர் கேள்விகளும்….  எதிர் எதிர் பதில்களும் அளித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே உளவுத்துறை நன்றாக செயல்பட்டு  கொண்டிருப்பதால் தான் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கும், ஜனநாயகமும் காப்பாற்றப்படுகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். சட்டத்திற்கு உட்பட்ட நிச்சயமாக…..  அதோடு மனிதாபிமானத்திற்கு உட்பட்டு நிச்சயம் அப்படி ஆக்கிரமிப்புகள் இருந்தால்,  இந்த ஆட்சியில் அகற்றப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாட்டிலில் பெட்ரோல் அடைத்து,  கோயிலுக்குள் வீசிய சம்பவத்தில் உடனடியாக அந்த ஆசாமியை கைது செய்திருக்கிறோம். அந்த திருக்கோயில் தனியார் ட்ரெஸ்டின் மூலமாக செயல்படுத்தப்படுகின்ற திருக்கோயில். அந்த செயலிலே ஈடுபட்டவர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு,  விடுதலை ஆகி,

பிறகு இன்னொரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு,  வழக்கு நிலுவையில் இருப்பவர். அதுவும் போதைக்கு அடிமையானவர். குடும்ப சூழ்நிலையின் காரணமாக,  விரத்தியில் இருப்பதால் இப்படிப்பட்ட செயலில் அவர்  ஈடுபட்டிருக்கின்றார். இதில் எந்தவிதமான திட்டமிடுதலும் இல்லை… எந்தவிதமான மத பிரச்சனையும் இல்லை…. சம்பவம் நடந்த ஒரு மணி துளிகளிலேயே குற்றவாளி கைது செய்யப்பட்டு,  குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது என தெரிவித்தார்.