
பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் பெஷாவரில் இன்று (திங்கட்கிழமை) மதியம் பெஷாவரின் காவல் கோட்டப் பகுதியில் அமைந்துள்ள மசூதியில் தொழுகையின் போது “தற்கொலைத் தாக்குதல்காரர்” தன்னைத்தானே வெடிக்கச் செய்ததில் 17 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 80 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியானது. முதற்கட்ட தகவல்களின்படி, தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய நபர் தொழுகையின் போது முன் வரிசையில் இருந்தபோது, அவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்துள்ளார்.
மேலும் காயமடைந்தவர்கள் பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புக் குழுவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.. மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
A blast was reported in a mosque in Peshawar's Police Lines area in Khyber Pakhtunkhwa capital. Several people were injured in the blast.
17 Martyred, 90 injured in #Peshawar suicide blast.#PeshawarBlast pic.twitter.com/X1VeD921G5— Walled city of Peshawar (@Oldpeshawar) January 30, 2023