தமிழக அரசு சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக் கூடாது என கடந்த 2020-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தடை செய்து கடல் பகுதியில் இருந்து 12 நாட்டிகள் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கடந்த மாதம் 24-ஆம் தேதி இடைக்கால அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். இந்த இடைக்கால அனுமதி வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், பதிவு செய்யப்பட்ட ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும் எனவும், காலை 8 மணிக்கு புறப்படும் படகுகள் மாலை 6 மணிக்குள் மீண்டும் கரை திரும்ப வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தற்போது ஞானசேகரன் மற்றும் மாரியப்பன் ஆகியோர் வக்கீல்கள் மூலம் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் 12 மைல் கடல் பகுதிகளுக்கு அப்பால் சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்குள் சுருக்குமடி பலகைகளை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும், இந்த வலைகளை பயன்படுத்தி 53 மணி நேரம் மீன் பிடிக்க அனுமதி வழங்குமாறு உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி 10 மணி நேரம் மட்டுமே மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அந்த நேரம் போதுமானதாக இல்லை எனக் கூறி தற்போது இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள.