என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, உங்கள் அன்பை எல்லாம் பெற்று,  நீங்கள் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அமர்த்தும் பொழுது கடவுளை சாமானிய மனிதனின் பக்கத்துல கொண்டு வருவது பாரதிய ஜனதா கட்சியினுடைய கடமையாக இருக்கும் சகோதர – சகோதரிகளே… இதை நீங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு,  நம்மோடு  நீங்கள் துணை நிற்க வேண்டும்.

கோவில் பணம் என்பது கல்விக்கு… படிப்பிற்கு…. பக்கத்தில் இருக்கக்கூடிய அரசு பள்ளியிலே,  காலை உணவு திட்டத்திற்கு…. மதிய உணவு திட்டத்திற்கு…. கோவிலுடைய பெயரிலே பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, ஆரம்பித்து வசதி படைத்தவர்கள் மட்டுமே கல்விக்கு போகிறார்கள் என்பதை உடைத்து,  சாதாரண மனிதர்களும் படிப்பதற்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய கோவில் பணம் மட்டும் போதும் ஐயா, வேறு எதுவும் நமக்கு வேண்டாம்.

அரசு பட்ஜெட்டே தேவை இல்லை. தமிழகத்தில் அப்படிப்பட்ட கோயில்கள் எல்லாம் கட்டி வைத்துவிட்டு போய்விட்டார்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலம் பழமையான கோவில்கள் இங்கு இருக்கிறது. அது பாரதிய ஜனதா கட்சியால் செய்து காட்ட முடியும். நீங்கள் எங்களோடு இருக்க வேண்டும் என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள் என தெரிவித்தார்.