அவசரகால பண தேவைக்காக பலரும் தனிநபர் கடன்களை வாங்குகின்றனர். ஆனால் அந்த கடனை வாங்குவதற்கு அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, தொகை வருவதற்கு காலம் தாமதம் ஆகிவிடுகிறது. இந்நிலையில் தற்போது ஆதார் கார்டை மட்டுமே பயன்படுத்தி மிகக் குறைந்த காலத்தில் தனி நபர் கடன் வழங்கப்படுவது உங்களுக்கு தெரியுமா. இந்த வகை கடன்கள் குறைவான ஆவணங்களை கொண்டு, விரைவான ஒப்புதல் பெறப்பட்டு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இது பற்றிய முழு விவரம் இதோ. அதாவது இந்த வகையான தனிநபர் கடலில் ஒருவரின் ஆதார் அட்டை மட்டுமே வைத்து ரூ.10000 வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் இதில் 21 முதல் 60 வயது உள்ளவர்கள் மற்றும் குறைந்தபட்சம் 15000 மாத சம்பளம் வாங்குபவர்கள் மட்டுமே தகுதி அடைந்தவர்கள ஆவார். மேலும் ஆதார் கார்டை வைத்து தனிநபர் கடன்களை வழங்கும் வங்கி மற்றும் NPFC வங்கி நிறுவனங்களை தேர்வு செய்து கடன் வழங்குனர் மூலம் முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.