தமிழகத்தில் நடைபாண்டுக்கான சட்டசபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் கலந்து கொண்டார். சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் ஆர்.பி. உதயகுமார் நேரடி ஒளிபரப்பு குறித்து கேள்வி எழுப்பினார். இதில் அவர் கூறியதாவது, சட்டசபை கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பேசியுள்ளனர். இதனை எப்பொழுதும் நேரடி ஒளிபரப்பில் காட்டப்படும்.
ஆனால் நேற்று நேரடி ஒளிபரப்பில் இதுகுறித்து எந்த காட்சிகளும் காட்டப்படவில்லை. இதுகுறித்து எனது தொகுதி மக்கள் நீங்கள் சட்டசபைக்கு செல்லவில்லையா? என கேள்வி கேட்கிறார்கள். சட்டமன்ற கூட்டம் என்பது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்திற்கும் பொதுவானது தானே. பின்னர் ஏன் இந்த மாற்றத்தை செய்துள்ளீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு சபாநாயகர் அப்பாவு பதில் அளித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது,”திட்டமிட்டு அதுபோன்று நடக்கவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்துகிறேன். என பதிலளித்தார்.