ஆன்லைன் மோசடிக்கு அடுத்தபடியாக தற்போது “டிஜிட்டல் அரெஸ்ட்” என்ற பெயரில் மோசடி செய்து வருகின்றனர். அதாவது முதலில் அவர்கள் கவர்மெண்ட் அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து, பாதிக்கப்பட்டவர்களை வீடியோ கால் வரவழைத்து, அவர்களிடம் பல மணி நேரம் விசாரணை நடத்துகின்றனர்.

அந்த விசாரணை நேரத்தில், அவர்கள் காலை கட் செய்யவோ, அறையை விட்டு வெளியேறவோ விடமாட்டார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் நீங்கள் போதை பொருள் கடத்தல், சட்ட விரோதமான பொருட்களை வைத்து இருப்பது போன்ற குற்றச் செயலில் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். இவற்றிலிருந்து வெளியேற உங்கள் வங்கி கணக்கில் இருந்து எங்களுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று கூறி மொத்த பணத்தையும் கறந்து செல்கின்றனர்.