
கேரளாவில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவான வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி இன்று மாலை குறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூரில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோன்று வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஒரு சில பகுதியில் ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.