பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் தலிபான் அரசு தற்போது மேலும் ஒரு புதிய கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. அதாவது, ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் யாரும் ஐநாவில் பணியாற்றக்கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்த தலிபான்கள் முன்னதாக பெண்கள் கல்வி நிலையங்கள் மற்றும் வேலைக்கு செல்லக்கூடாது என தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி ஐக்கிய நாடுகள் சபை தரப்பில் வெளியிட்ட தகவலில் இருப்பதாவது “ஐநா அமைப்பில் ஆப்கன் பெண்கள் பணியாற்ற தலிபான்கள் அரசு தடைவிதித்துள்ளது. இந்த அறிவிப்பை அவர்கள் எழுத்துபூர்வமாக அறிவிக்காமல் வாய் மொழியாக தெரிவித்துள்ளனர். தலிபான்களின் இந்த முடிவை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. பெண் ஊழியர்கள் இன்றி மருத்துவத்துறை சார்ந்த இங்குள்ள உயிர்காக்கும் கருவிகளை இயக்க முடியாது” என தெரிவித்துள்ளது.