ரஷ்ய அதிபரான புதின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பல ரகசிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ரஷ்ய அதிகாரி Gleb பேட்டியளித்த போது “தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் தான் செல்லும் பாதை தெரியாமல் புதின் மறைந்து வாழ்வதாக அவர் கூறியுள்ளார்.

பெரும்பாலும் புதின் தனது வீட்டிலே மறைந்து வாழ்வதாகவும், பல நகரங்களில் ரகசிய அலுவலகங்களை அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே ரகசியமான ரயில் நெட்வொர்க், பல நகரங்களில் ரகசிய அலுவலகங்கள், தாமாகவே தனிமைப்படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை புதின் மேற்கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.