கேரள மாநிலத்தில் உள்ள கொல்லத்தில் பெண் வேடமிட்டு ஆண்கள் மட்டுமே கலந்துக்கொள்ளும் வினோத கோவில் திருவிழா ஒன்று நடைபெற்றிருக்கிறது. ஆரம்ப காலத்தில் இந்த திருவிழாவில் பெண்களும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து இந்த திருவிழாவில் ஆண்கள் சேலை கட்டி சென்றிருக்கின்றனர்.

பின் ஆண்கள் சேலை கட்டி அந்த திருவிழாவுக்கு செல்வது நடைமுறையாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த விழா பிரபலமடைய தொடங்கியதால் ஒப்பனை கலைஞர்களும் கோவில் முன்பாகவே முகாமிட்டு இருக்கின்றனர். அதோடு இந்த திருவிழாவில் ஆண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விளக்கெடுப்பதாக கூறப்படுகிறது.