இந்திய வருமானவரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரியைப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. அதனை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் அனைவருக்கும் பான் கார்டு வழங்கும் பணியானது 2017 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் பேன் கார்டு வைத்திருப்போர் நிச்சயம் ஆதார் எண்ணுடன் பான் கார்டு என்னை இணைக்க வேண்டும். வரியைப்பு செய்வதை தவிர்க்கவே ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வலியுறுத்தப்படுகிறது. இதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மார்ச் 31 ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைவதாக இருந்தது. இந்நிலையில் இதற்கான கால அவகாசம் மீண்டும் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஆதார் அட்டைதாரர்கள் என்ற இணையதளம் மூலமாக பான் கார்டு இணைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அத்துடன்  567678 அல்லது 56161   என்ற எண்ணிற்கு எஸ் எம் எஸ் அனுப்பியும் ஆதாருடன் பான் கார்டு இணைக்கலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

யாரெல்லாம் ஆதார் பான் கார்டை இணைக்க வேண்டும்?

  • அசாம், மேகாலயா, ஜம்மூ காஷ்மீர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள்.
  • வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (NRI).
  • 80 வயதை தாண்டிய சீனியர் சிட்டிசன்கள்.
  • இந்திய குடிமக்கள் அல்லாமல் இந்தியாவில் வசிக்கும் நபர்கள்.

இவர்கள் அனைவரும் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க தேவையில்லை. மற்ற அனைத்து இந்திய குடிமக்களுமே கட்டாயமாக ஆதார் பான் கார்டு இணைக்க வேண்டும்