இந்தியாவின் ஒரே PAN India கட்சி பாஜக மட்டுமே என பிரதமர் மோடி பெருமிதம் கூறியுள்ளார். டெல்லியில் பாஜகவின் புதிய அலுவலகத்தில் பேசிய பிரதமர் மோடி,இரண்டு மக்களாக இடங்களுடன் தொடங்கிய பாஜகவின் பயணம் இன்று 303 மக்களவை இடங்களை எட்டி இருக்கிறது. கிழக்கில் இருந்து மேற்குவரையிலும் வடக்கில் இருந்து தெற்குவரையிலும் பாஜக மட்டுமே PAN India கட்சி. அரசியலமைப்பு நிறுவனங்களின் வலுவான அடித்தளம் எங்களிடம் இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.