முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணியை போற்றும் விதமாக அவரின் நினைவிடத்துக்கு அருகில் கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, பேனா சின்னத்தை ரூபாய்.81 கோடி செலவில், 42 மீட்டா் உயரத்தில் அமைக்க அரசு திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக கடலில் பேனா சின்னம் வைப்பதற்கு தடைவிதிக்க கோரி மீனவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பேனா நினைவு சின்னத்தால் சுற்றுச்சூழல் மட்டுமல்லாமல் கடல் வாழ் உயிரினங்களும், மீனவர்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்று அதன் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இத மனுவை கோர்ட் விசாரிக்க இருக்கிறது.