ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் இருந்ததால் பேடிஎம் செயலிக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் மார்ச் 15ஆம் தேதிக்குள் பிபிஎல் அனைத்து பரிவர்த்தனைகளும் முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனால் பேடிஎம் இன் யுபிஐ பரிவர்த்தனைகள் பாதிப்பு ஏற்படுமா ?என்று குழப்பத்தில் உள்ளனர் பயனர்கள். ஆனால் இது குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் தற்போது வந்துள்ளது.

அதாவது பணம் செலுத்தும் சூழலில் ஏதேனும் இடையூறுகள்  இருந்தால் அதை தடுக்கும் விதமாக பேடிஎம் என்று யூபிஐ ஹேண்டில் பயன்படுத்தும் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்களை மாற்ற முயற்சி செய்ய வேண்டும் என்று NPCI ஐ ஆர்பிஐ வங்கி கேட்டுள்ளது. அதன்படி மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியில் இருந்து வங்கி சேவைகளை வாடிக்கையாளர்கள், வணிகர்கள் தங்களுடைய பணத்தை மற்ற வங்கிக்கு மாற்றிக் கொள்ளலாம்.