நாடு முழுவதும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அந்தியோத ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. தமிழகத்தின் மொத்த 18.6 லட்சம் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களும் 95.6 லட்சம் முன்னுரிமைக்கார்டுகளும் உள்ளன. இந்த கார்டுகளும் மத்திய அரசு மாநில அரசு என்று தனித்தனியாக பிரித்து ரசீது பதிவு செய்யப்படுகிறது. இந்த கார்டுதாரர்களுக்கு 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் தற்போது வரை அந்தியோதயா காடுகளில் 65.47 லட்சம் பேரும் முன்னுரிமை காடுகளில் 2.99 கோடி பேர்களும் உறுப்பினராக உள்ள நிலையில் உண்மை தன்மையை சரிபார்க்க மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனால் ரேஷன் கார்டுகளில் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா கார்டில் உள்ள ஒவ்வொரு நபரின் விரல் கைதுகைரேகையும்  பதிவு செய்த ஆதார் வழியாக உறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 66 சதவீதம் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விவரங்களை 29ஆம் தேதிக்குள் முடிக்கவும் ரேஷன் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.