திண்டுக்கல் மாவட்டம் பச்சைமலையான்கோட்டை, சிவகாசி கீழ்திருத்தங்களில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த வெடி விபத்தில் ஜெயராம், ராணி ஆகிய இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் சிவகாசியில் 3 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.