
நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறிய நேரத்தில், பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் இல்லை.
நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினத்தன்று மக்களவை பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குப்பி வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில் புகை சூழ்ந்தது. புகை சூழ்ந்ததை தொடர்ந்து மக்களவையில் இருந்து எம்பிக்கள் அவசர அவசரமாக வெளியேறினர். கண்ணீர் புகை வீசிய இருவரும் சர்வாதிகார ஆட்சி ஒழிக என முழக்கமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பார்வையாளர்களாக வந்த இருவர் கண்ணீர் புகை குப்பியை வீசியுள்ளனர். சபாநாயகரை நோக்கி ஓடி வந்த நபரை சிவசேனா எம்பி அரவிந்த் மடக்கி பிடித்துள்ளார். பின் பாதுகாவலர்கள் இருவரையும் பிடித்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்ற மக்களவையில் கண்ணீர் புகை குப்பியை வீசியவரின் அடையாளம் தெரிந்தது. சாஹர் என்பவர் கண்ணீர் புகை குப்பிகளை வீசியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதையடுத்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.. நீலம், அமோல் ஷிண்டே , சாஹர் என 4 பேரை டெல்லி போலீஸ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
4 கட்ட சோதனையை தாண்டி நாடாளுமன்றத்திற்கு உள்ளே நுழைய முடியும் என்ற சூழ்நிலையில், பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறிய நேரத்தில், பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் இல்லை.. சத்தீஸ்கர் மாநில முதல்வர் பதவியேற்புகாக ராய்ப்பூருக்கு பிரதமர் சென்றிருந்த நிலையில், அத்துமீறல் சம்பவம் நடந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்ததாக கைதான இரண்டு பேரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாடாளுமன்றத்திலும் விசாரணையை தொடங்கினர். என்.ஐஏ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இந்த வழக்கை விசாரிக்கும் என டெல்லி காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
Two protestors, a man and a woman have been detained by Police in front of Transport Bhawan who were protesting with colour smoke. The incident took place outside the Parliament.
The question is why they are threatening the parliament.#ParliamentAttack
pic.twitter.com/pAT7iE6cHq— Harsh Tiwari (@harsht2024) December 13, 2023
Complete lapse of security that too on the day on which #ParliamentAttack had happened. Should be thoroughly investigated. If they could take tear gas inside parliam, they could have taken other weapons as well.
How did the security allow this? pic.twitter.com/9GGDuMiVtA
— Indian Right Wing Community (@indianrightwing) December 13, 2023
Security breach outside the parliament too. What’s happening?
— Prashant Kumar (@scribe_prashant) December 13, 2023