மத்திய மாநில அரசுகள் பெண் குழந்தைகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் பெண் குழந்தைகளுக்கு மிகவும் பிரபலமான திட்டம். அதேபோல  உத்தரபிரதேச  மாநில அரசும் கன்யா சுமங்கலா யோஜனா என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 15,000 கொடுக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது அந்த தொகை 25000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகள் கல்வி பெறுவது மட்டுமல்லாமல் சுய சார்புடையவர்களாகவும் மாறுவார்கள் என்று கூறப்படுகிறது. ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, மின்சார அட்டை  ஆகியவை வசிப்பிட சான்றாக தேவைப்படும். அதிகபட்ச குடும்ப வருமானம் மூன்று லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முதலில் https://mksy.up.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.