பீகாரில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆன்லைன் சர்வே முடிவுகள் ஒட்டுமொத்த மாநிலத்தையே அதிர வைத்துள்ளது. அம்மாநிலத்தில் சுமார் 1 கோடி மொபைல் சிம் கார்டுகள் 9 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் பெயரில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகக் குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதை விரும்பி பெற்றோர்களே அவர்கள் பெயரில் சிம் வாங்கித் தருகிறார்களா அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக இப்படிச் செய்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொலைத்தொடர்புத் துறை நடத்திய இந்த ஆய்வில், ஒரு குடும்பத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் இருப்பதும், அவை குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் பிரித்து வாங்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் டிஜிட்டல் வளர்ச்சியாகத் தெரிந்தாலும், சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் சிறுவர்களின் பெயரில் இவ்வளவு சிம்கள் இருப்பது ஆபத்தானது என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.