மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை யாரோ,  ஒரு சிலர் பணத்திற்காக…. சுயநலத்திற்காக… சுய லாபத்திற்காக… சென்றிருக்கலாம்.  நான் 2017லே இங்கே உழவர் சந்தையிலே நீட் தேர்வு  வேண்டாம் என்று நடந்த கூட்டத்திற்கு வந்தபோது….  அந்த மாநாட்டிற்கு வந்தபோது….   அன்றைக்கு என்னை வரவேற்ற அத்தனை தொண்டர்களும் சரி,  கீழே உள்ள நிர்வாகிகளும் இன்றைக்கும் நம்மோடு நிற்கிறீர்கள்.

யாரோ ஒரு சிலர் அந்தந்த பகுதிகளில் சொந்த பிரச்சனைகளால்,  பொருளாதாரப் பிரச்சினைகளால். காசுக்கு ஆசைப்பட்டார்கள்,  அது தெரியும். இன்னைக்கு பழனிச்சாமி சொல்கிறார். டிடிவி தினகரனை நான் ஒரு அரசியல்வாதியாகவே நினைக்கலன்னு சொல்றாரு. ஆமா…  ஏன்னா அவர பொருத்தவரைக்கும் அரசியல்வாதி என்றால் ? துரோகம் செய்யணும்,  காலில் விழுந்து பதவி வாங்கணும். அப்புறம் அவங்களுக்கு துரோகம் செய்யணும். அதே மாதிரி துரோகம் செய்கிற கும்பல் தான் அவருக்கு பிடிக்கும். இனம் இனத்தோடு தானே சேரும்.

துரோகம் செய்கின்ற கும்பல்…  பதவிக்காக… சுயநலத்திற்காக… பதவி வெறிக்காக… அலைகின்ற அந்த சுயநல கும்பலுக்கு,  அதுபோன்ற பதவி வேறு பிடித்தவர்கள் தான்… பதவிக்காக எந்த பொய்யையும் செய்பவர்கள் தான்… எந்த தவறையும் செய்பவர்கள் தான்…. அவர்கள் அரசியல்வாதியாக ஏற்றுக் கொள்வார். அவருடைய அளவுகோல் அது.

அவரை பொறுத்தவரை துரோகம் செய்பவர்கள் தான் அவருக்கு அரசியல்வாதிகள். ஆனால் இன்னைக்கு டிடிவி தினகரன் அரசியல்வாதியாகவே நான் பார்க்கவில்லை என்கிறாரே…  ஆனால் நம்ம கட்சியில அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உள்ள நிர்வாகிகளை… அவர்கள் பதவிக்கேற்ப,  அவர்களுடைய தகுதிக்கேற்ப அல்ல நம்முடைய கட்சியிலே அவர்கள் வச்சிருந்த பதவிக்கேற்ப… பல கோடிகளில் இருந்து லட்சங்கள் வரை….

ஏன் கீழே உள்ள கட்சி பிரமுகர்களை 25 லட்சம் கொடுத்தும் கூட விலைக்கு வாங்குகின்ற நிலைமை தான் பழனிச்சாமி கும்பல் அலைந்து கொண்டிருக்கின்றது. கேட்டா தினகரனுக்கு பின்னாடி நாலு பேர் தான் இருப்பாங்கன்னு சொல்றாரு. ஆனா மூட்டை மூட்டையாகபணத்தை கொண்டு போய்… நமது நிர்வாகிகளை விலை பேசியும்,  சொக்கத்தங்கங்களாக இன்றைக்கு நம்மோடு இந்த இயக்கத்தை தமிழ்நாடு முழுவதும் வழி நடத்துகிறார்கள் என தெரிவித்தார்.