தமிழ் கடவுள் முருகனின் 3-வது படைவீடான பழனி முருகன் கோவிலில் 16 வருடங்களுக்கு பின் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கோலாகலமாக நடைபெறும் குடமுழுக்கு விழாவிற்காக ஏற்பாடுகளும் பிரம்மாண்டம் ஆக செய்யப்பட்டு உள்ளது. காலை 8 மணிக்கு மேல் ராஜ கோபுரம், தங்கவிமானம் போன்றவற்றிற்கு புனித நதிகளிலிருந்து சேகரிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்ட புனிதநீர் ஊற்றப்பட உள்ளது. இந்நிலையில் ஹெலிக்காப்டர்கள் வாயிலாக கோபுரங்கள் மற்றும் பக்தர்களுக்கு மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பழனி தண்டாயுதபாணி கோயில் பிரசாதத்தை அஞ்சல் வழியில் பெற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ரூபாய்.250 செலுத்தி பழனி பஞ்சாமிர்தம், சுவாமி படம், பிரசாதம்(திருநீர்) பெற்றுக்கொள்ளலாம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தலைமை தபால் நிலையம் மற்றும் துணை அஞ்சலகங்களில் இதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பழனி முருகன் கோவிலுக்கு நேரடியாக போக முடியாதவர்கள் இவ்வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.