சென்ற சில மாதங்களாக மத்திய அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டுமாக அமல்படுத்த வேண்டும் என்று அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமின்றி பல மாநில அரசு ஊழியர்களும் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டுமாக அமல்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சலபிரதேசம், பஞ்சாப் மற்றும் ஜார்கண்ட் ஆகிய நாட்டின் சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. அதன்படி இந்த மாநிலங்களின் ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலனை பெறத் துவங்கியுள்ளனர். எனினும் மாநில அரசின் இந்த முடிவுக்கு பின் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதாவது, பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ரிசர்வ் வங்கியானது முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளது.

அரசின் இம்முடிவுக்கு பின் மத்திய அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்து உள்ளது. மேலும் அரசின் இந்த பெரிய நடவடிக்கை அரசுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று மாநில நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. வர இருக்கும் வருடங்களில் நிதியில்லாத ஓய்வூதிய பொறுப்புகள் (அன்ஃபண்டட் பென்ஷன் லயபலிடீஸ்) பிரச்சனை வரக்கூடும் என்று RBI கூறி உள்ளது. சில மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவரக்கூடும் என்று RBI தெரிவித்து இருக்கிறது.