பிக்பாஸ் சீசன் 6ல் 3-வது இடத்தை பிடித்தவர் ஷிவின் கணேசன். பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் யாரிடமும் பேசாமல் இருந்த ஷிவின், பிறகு தனக்கு கிடைத்த வாய்ப்பின் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடி இன்று ஒட்டுமொத்த திருநங்கை சமூகத்துக்கும் வெளிச்சத்தை கொடுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி உள்ளார்.

மேலும் உலகெங்கிலும் இருக்கும் பல கோடி மக்கள் ஷிவினை தங்களது சகோதரியாகவும், மகளாகவும் நேசிக்கும் அளவுக்கு அவர்களின் இதயங்களை வென்றுள்ளார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஷிவினை, ரச்சிதா மற்றும் நண்பர்கள் செண்டை மேளத்துடன் ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது வழி நெடுகிலும் மக்கள் பலரும் ஷிவினுக்கு கைகுலுக்கி வாழ்த்து சொல்லி ஆட்டோகிராப் வாங்கி சென்றனர்.