ஆசிய நாடுகளில் ஒன்று இலங்கை. கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து, பின் அண்டை நாடுகளின் உதவியுடன் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் மற்றொரு ஆசிய நாடான பாகிஸ்தானிலும் தற்போது கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அந்நாட்டில் கோதுமை, பால் பொருட்கள், ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அவற்றின் விலையும் உயர்ந்துள்ளதால் பணவீக்கம்  ஏற்பட்டது. மேலும் அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையினால் அந்நாடு சிக்கி தவித்து வருகிறது. இதனை தொடர்ந்து, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள, அமெரிக்கா மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளிடம் இருந்து பாகிஸ்தான் கடன் கேட்டுள்ளது. அதன்படி  ஐக்கிய அரபு அமீரகமும் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு கடனாக நிதியுதவி வழங்க முன்வந்தது. ஆனால் வேறெந்த நட்பு நாடுகளும் குறைந்த அளவிலான பாதிப்புகளுடன் கூடிய உதவியை அளிக்க முன் வரவில்லை.

எனவே பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக, ஏற்கனவே ஐ.எம்.எப். யிடம் பாகிஸ்தான் அதிக கடன் பெற்றுள்ளதால், மீண்டும் கடன் வாங்கும்  முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்காக சி.டி.எம்.பி. என்ற கடன் மேலாண் திட்டம் ஒன்றை வகுத்தது. ஆனால் இந்த சி.டி.எம்.பி. திட்டத்தில் உண்மையில்லை. மேலும் அதில் பல்வேறு தவறுகளுக்கான நோக்கங்கள் உள்ளன என்று தொழில்நுட்ப ரீதியிலான விவாதத்தின்போது கூறப்பட்டது. இதனால் அவர்கள் பெற கூடிய நிதி உதவிகள்  அனைத்தும் பாகிஸ்தானின் ராணுவ உயரதிகாரிகளின் கைக்கு போய் சென்றடைகிறது. இவ்வாறு ஐ.எம்.எப். குறிப்பிட்டுள்ளதை தொடர்ந்து அதன் எதிரொலியாக அந்த திட்டம் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.