தாய்லாந்தில் சாவத் ஸ்ரீராட்சலாவ் (44) என்ற காவலாளி, அரோம் பனன் (56)  என்பவரின்  நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அந்த காவலாளி சாவத்திகைப்பற்றியிடம், முதலாளி  எப்போதும் கடுமையான சொற்களை கூறி, கண்டிப்புடன் நடத்தி வந்துள்ளார். மேலும் பல மணிநேரம் வேலை பார்க்கவும் செய்துள்ளார். இவையெல்லாம் அவர் மனதில் ஆழமாக பதிந்து, ஒரு கட்டத்தில் தனது முதலாளியின்  நெஞ்சில் கத்தியால் குத்தும் அளவுக்கு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவலிறிந்த போலீசார் சாவத்தை கைது செய்து விசாரணை நடத்தினர்.  அதில் கூறியுள்ளதாவது, ரொம்ப நாளாகவே என் முதலாளியின் மேல் கடும் கோபத்தில் இருந்து வந்ததாகவும்,  வீட்டுக்கு சென்றால் கூட அவர் என்னை திட்டியதும், கடுமையாக நடந்து கொண்டதுமே என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். இதனால் எனக்கு தூக்கம் இல்லாமல் பல நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தேன் என்று கூறினார். இச்சம்பவம் நேற்று (பிப்.,1) பாங்காக்கின் லம்பினி என்ற பூங்காவில் நடந்துள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், காவலாளி சாவத்தின் மீது வழக்கு பதிவு செய்தனர்.