
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் 11 வது ராணுவ தளபதியாக பணியாற்றி வருபவர் தான் அசின் முனீர். இந்நிலையில் இவருக்கு பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதன் மூலம் அயூப் கானுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவ வரலாற்றில் 2-வது பீல்ட் மார்ஷல் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியதாவது ஜெனரல் சையத் அசிம் முனீரை பீல்ட் மார்ஷல் பதவிக்கு பதவி உயர்வு அளிக்க பாகிஸ்தான் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.