
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து பல நாட்டு தலைவர்களும் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அவர் இந்தியாவிற்கு முழு ஆதரவு வழங்குவோம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அதிபர் புதினிடம் இந்த வருடத்தின் இறுதியில் நடைபெறும் வருடாந்திர இருதரப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை அதிபர் புதின் ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வருவதாக உறுதியளித்தார். மேலும் இந்த தகவலை ரஷ்யா அதிபர் மாளிகை உறுதி படுத்தி உள்ளது.