வங்காளதேச நாட்டில் சிட்டகாங்க் மாவட்டத்தில் கோஷப்பூர் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.