
என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கு வித்தியாசம் தெரியாதவருக்கு 511 வாக்குறுதி வித்தியாசம் தெரியுமா ? சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் வித்தியாசம் தெரியாத முதலமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம். 511 வாக்குறுதியில் எந்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார் என்று அவருக்கு தெரியும்.
வெறும் 50 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. ஆனால் முதலமைச்சர் 99 வாக்குறுதி நிறைவேற்றிட்டேன்னு ஊர் ஊரா சொல்லிட்டு திரிகிறார். பட்டியல் சமுதாய மக்களை மேடையில் வைத்து அசிங்கப்படுத்துவதை ஒரு சாதனையாக வந்து சொல்லுவாங்களா ? மனுவை கொடுத்தால் தலையில் அடிப்பது, பெண்களை அமைச்சர் பொன்முடி அவர்கள் ஓசிலதான பஸ்ல போறீங்கன்னு… ஓசி, ஓசின்னு சொல்வது.
இதையெல்லாம் சாதனையாக சோமனூர்க்கு வந்து MLAவோ, திமுகவுடைய அமைச்சரோ உங்ககிட்ட சொல்லப் போறார்களா ? ஊழல் வழக்கிலிருந்து அமைச்சர்களை காப்பாற்றுவதற்கு அரசு இயந்திரம் முழு நேரமாக வேலை செய்து கொண்டு இருக்கின்றது. இரண்டு உதாரணம் சொல்றேன்… உங்க நேரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என தெரிவித்தார்.