சட்டசபையில் ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “வகுப்புவாத சக்திகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஊதுகுழலாக செயல்படுகிறார். அரசுக்கு எதிரான ஆளுநரின் செயல்பாடுகளை கைத்தட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம். ஆளுநர் கூறுவதை நம்பும் அளவுக்கு தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. மக்கள் நலனுக்காக கொண்டு வரும் மசோதாக்களை கிடப்பில் போடுவதால் பேரவை வருந்துகிறது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் தனித் தீர்மானம் குறித்து ஜவாஹிருல்லா பேசியபோது “தமிழ்நாடு மக்களால் விரும்பத்தகாத ஆளுநராக ஆர்.என்.ரவி இருக்கிறார் என்று விமர்சித்துள்ளார். மேலும் அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமாக மாணவர்கள் மத்தியில் ஆளுநர் பாடம் எடுத்து வருகிறார். தமிழ்நாடு அரசுக்கு நண்பராக இல்லாமல், அரசியல் சட்ட மாண்புகளை மிக மோசமாக சிதைத்து வரும் ஆர்.என்.ரவி ஒரு நிமிடம் கூட அந்த பதவியில் நீடிக்கக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.