செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், ஊடகங்கள் வாயிலாக….. ஊடகங்கள் உங்களிடம் கேட்கின்றேன்…  எடப்பாடி ஒன்னு சொன்னாரு….. மன்னிப்பு கடிதம் எழுதிவிட்டு,  என்னோடு வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று சொன்னார். இதுவரை அவரிடம் எவ்வளவு மன்னிப்பு கடிதம் வந்திருக்கிறது என்பதை எடப்பாடி வெளியிட வேண்டும் ? யாராவது போனோமா ? எங்கோ ஒருவர் விலை போகலாம்…  அரிசியில் கல் இருக்கின்றது  என்பதற்காக கடையில் போய் கல்லுக்கு பதில் கால் கிலோ அரிசி தாங்க என கேக்க மாட்டோம்…..

கல்லை பொறுக்கி எடுத்துவிட்டு  அரிசி இருக்கும்….. அது போல பயிருக்கு நடுவே களைகள்  பிறக்கும்…. காசுக்கு போகிறவர் போவார்கள். அதையெல்லாம் நாம் பொருட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எங்களை பொறுத்தவரை லட்சியத்தில்…. கொள்கையில்…. உறுதியாக இருக்கிறோம்… என்னை பொறுத்தவரை கால் கிலோ விஷத்தை வாங்கி குடிச்சிட்டு செத்தாலும்,  சாவேனே தவிர…. எடப்பாடி பின்னால் போக மாட்டேன். நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்…

நடை பெறக்கூடிய தேர்தல் இந்தியா கூட்டணிக்கும், NDA கூட்டணிக்கும்  இடையே நடைபெற்ற போகின்ற தேர்தல்….  தமிழகத்தைப் பொறுத்தவரை அண்ணன் ஓபிஎஸ் தலைமையில் கூட்டணி அமையும்.  பாரதிய ஜனதா கட்சியோடு அமைவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறது. அது குறித்து தலைமை முடிவு செய்யும். இன்னும் காலம் இருக்கிறது. என்னை பொருத்தவரை களத்தில் எங்களை தவிர்த்து விட்டு அரசியல் களமாக இருக்காது. 2024 இல்ல, 2026 தேர்தலையும் தீர்மானிக்க போகிற சக்தி அண்ணன் ஓபிஎஸ் தான் என தெரிவித்தார்.